சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

SHARE

பகுதி 1 இணைப்பு

சிற்ப இலக்கணம் என்பது ஒரு சிற்பத்தின் முழுமையான அமைப்பு. இதை சிற்ப அமைதி அல்லது கலையமைதி என்றும் கூறுவர்.

ஒவ்வொறு அமைப்பும் ஒரு உறுதியான வரையறையின் கீழ் இருக்கும். அவ்வாறுதான் செதுக்கப்படும்.

சிற்பம் ஒன்றின் கை அமைப்பு, கால் அமைப்பு,  ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் – இவை ஒவ்வொன்றும் அமைய ஒரு விதிமுறை உண்டு. இன்னென்னப் படிமங்கள் இந்தந்த வரையறையின் கீழ்தான் அமைக்கப்படும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க இருக்கிறோம்…

முதலில் சிற்ப கை அமைப்பின் வரையறையைப் பார்ப்போம்

சிற்பக் கை அமைதிகள்:

சிற்ப படிமங்களில் காணப்படும் உருவங்கள் ஒவ்வொன்றின் கை அமைப்பும்  முத்திரை காட்டியவாறு இருக்கும். இதை ஹஸ்தம் என்பர்.

ஹஸ்தம் என்பது உள்ளங்கையைக் குறிக்கும்.

சிற்பங்களில் உள்ள கைகளில், கை விரல்களை நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்.. ஆகிய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டு தன் எண்ணத்தை  வெளிப்படுத்தும் அமைப்பு கை இலக்கணம் அல்லது கை அமைதி எனப்படும்.

நாட்டியக் கலைகளில் அபிநய பேதங்களை இவ்வமைப்பு வெளிப்படுத்துவதால் இதை முத்திரை ( பிடி)  என்றும் கூறுவது உண்டு. 

ஆனால் ஹஸ்த முத்திரை – என்பதே பொதுவான பெயர்.

சிற்பப் படிமங்களில் 32 வகையான கை முத்திரைகள் உள்ளன. இவற்றில் 

 தொழிற் கை என்ற அமைப்பில் உள்ள 24 முத்திரைகளும், எழிற் கை என்ற அமைப்பில் உள்ள நான்கு முத்திரைகளும், இரட்டைக் கைகள் என்ற அமைப்பில் நான்கு முத்திரைகளும் அடங்கும்.

24 தொழிற் கை முத்திரைகள்:

1. அபய ஹஸ்தம் 

2. வரத ஹஸ்தம் 

3.கடக ஹஸ்தம்

4. சிம்ம கர்ண ஹஸ்தம்

5. வியாக்யான ஹஸ்தம்

6. சூசி ஹஸ்தம்

7. தர்ஜனி ஹஸ்தம்

8. கர்த்தரீமுக ஹஸ்தம்

9. அலபத்ம ஹஸ்தம்

10. விஸ்மய ஹஸ்தம்

11. பல்லவ ஹஸ்தம்

12. நித்ரா ஹஸ்தம்

13. அர்த்த சந்திர ஹஸ்தம்

14. அர்த்த பதாக ஹஸ்தம்

15. திரிசூல ஹஸ்தம்

16. முஷ்டி ஹஸ்தம்

17.சிகர ஹஸ்தம்

18.பூ ஸ்பரிச அஸ்தம்

19. கடி ஹஸ்தம்

20. ஊரு ஹஸ்தம்

21. ஆலிங்கன ஹஸ்தம் 

22. தனுர் ஹஸ்தம்

23. டமரு ஹஸ்தம்

24.தாடி ஹஸ்தம்

4 எழிற்கை முத்திரைகள்: 

1. கஜ ஹஸ்தம்

2. தண்ட ஹஸ்தம்

3. டோல ஹஸ்தம் (லம்ப ஹஸ்தம்)

4. பிரசாரித ஹஸ்தம்.

4 இரட்டைக் கைகள்: 

1. அஞ்சலி ஹஸ்தம்-

2. தியான ஹஸ்தம்

3. புஷ்பபுட புட அஸ்தம்

4. தர்மசக்கர ஹஸ்தம்

இந்த 32 ஹஸ்தங்களை பார்க்கிறோம்..

ஒவ்வொறு முத்திரையின் பொருள் என்ன.? அதன் அமைப்பு எவ்வாறு இருக்கும்? எந்த முத்திரையை எந்த கடவுற்படிமம் கொண்டிருக்கும்.?

தொடர்வோம்…

– மா.மாரிராஜன்

இத்தொடருக்கான வரைபடங்கள் உதவி: சிற்பசெந்நூல்.

புகைப்படங்கள் உதவி: 1.Dr.பொன்னம்பலம் சிதம்பரம், 2. இரமேஷ் முத்தையன், 3. மது ஜெகதீஷ்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment