பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சென்னை அசோக் நகர் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை குறித்து கேலியாக பதிவுசெய்துள்ளார்.
அதில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பரவி வந்த வீண் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஊருல இருக்கறவனையெல்லாம் கண்டெண்ட் ஆக்குன என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா. என தனக்கு தானே கிண்டல் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்