சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பங்கேற்காதது பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சசிகலா ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார்.
அதிமுகவினரிடம் சசிகலா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் மாவட்ட செயலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தமக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவரின் சொந்த வீட்டின் கிரக பிரவேச பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
– மூவேந்தன்