சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

SHARE

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தத்துவார்த்த தளத்தில் நின்று கோட்பாட்டு உருவாக்கம் செய்து, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி வெளியிட்டுள்ள முதல் நூல். வெறும் ஆயுத போராளியாகவே பிரபாகரனை அறிந்த தமிழக தமிழர்களுக்கு இந்நூலின் மூலமாக பிரபாகரனை ஓர் தத்துவாசிரியனாக, சட்டக மேதையாக அவரின் ஒப்பற்ற ஆளுமைத்திறனையும் பன்முக ஆற்றலையும் அதன் முழு பரிணாமங்களையும் வெளிக்கொணருகிறார் நூலாசிரியர் சு.சேதுராமலிங்கம்.

சு.சேதுராமலிங்கம் அவர்கள் தமிழினத்திற்கு கிடைத்துள்ள ஓர் ஆகச்சிறந்த அறிவியலாளர். 2009 ஈழ பேரழிவின் விளைவாக “எல்லாம் முடிந்தது. இனி நாம் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை” என்று உலகத்தமிழர்கள் அனைவரும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘நாம் வீழவில்லை. நாம் வென்றுவிட்டாம். இனிதான் நாம் ஆட வேண்டிய உண்மையான ஆட்டமே ஆரம்பமாகிறது. அதற்குள் துவண்டு போனால் எப்படி?’ என்று நம்மை பேரெழுச்சிக்கொள்ள பெரு அழைப்பு விடுக்கிறார் அவர். அத்தகைய பேரெழுச்சிக்காக அவர் படைத்தருளிய ஓர் பேராயுதம் தான் ‘பிரபாகரன் சட்டகம்’.

2009 மே 18ல் தமிழீழ நடைமுறை அரசாங்கம் உலக வல்லரசுகளின் துணையோடு சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆயினும் உலக நாடுகளில் ஏன் புலிகள் மீதான தடை இன்னும் நீள்கிறது? ஏன் புலிகளின் படைப்புகள், திரைப்படங்கள், ஆவணங்கள் அனைத்தும் அரச பயங்கரவாதத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு தடை செய்யப்படுகின்றன? சமூக முற்போக்காளர்களாகவும் அதிகார வர்க்கத்திற்கு எதிரானவர்களாகவும் சொல்லிக்கொள்கிற மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்களுக்கும் அவர்களின் ஆவணங்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரமும் அனுமதியும் கருத்து சுதந்திரமும் ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களுக்கும் மறுக்கப்படுகின்றன? ஆம் புலிகள் வெறும் இராணுவ அமைப்பு அல்ல. ‘சாத்தான்கள் உருவாக்கிய இந்த உலக ஒழுங்கின் சட்ட திட்டங்களையும் ஆதிக்க வணிகச்சுரண்டலுக்கான அரச கட்டமைப்புகளையும் உடைத்தெறிந்து அடிமை பண்பாட்டுச்சேற்றில் உழன்று கொண்டிருக்கும் உலக தேசிய இனங்களின் விடியலுக்கான புதிய உலக ஒழுங்கின் தொடக்கமாக ஓர் அதியுச்ச புலிப்பண்பாட்டை படைத்து, பண்டைய தமிழர் நாகரீகத்தின் நீட்சியாக ஓர் நவீன தமிழர் நாகரீகமான கிளிநொச்சி நாகரீகத்தை உருவாக்கிய இறையியலாளர்கள்’. இது வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிவய வசனம் அல்ல. இதுகாறும் உலக வரலாற்றில் தோன்றிய தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள், தேசிய இயக்கங்கள், தேசிய விடுதலை போராட்டங்கள், தேசிய இனங்களின் பண்பாட்டு எச்சங்கள் அனைத்தையும் அறிவியல்பூர்வமாக ஆய்ந்து தெளிந்து இம்முடிவுக்கு வருகிறார் நூலாசிரியர் சு.சேதுராமலிங்கம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவராக தன் போராட்ட வாழ்க்கையை தொடர்ந்த பிரபாகரன் பின்னாளில் தமிழீழ மக்களால் தமிழீழ தேசியத்தலைவராக வரித்துக்கொள்ளப்படுகிறார். இறுதியாக நான்காம் ஈழப்போரின் நந்திக்கடல் அத்தியாயத்தின் ஊடாக ‘உலக தேசிய இனங்களின் விடிவெள்ளி’யாக பரிணமிக்கிறார் பிரபாகரன். “காரல் மார்க்ஸ், காஸ்ட்ரோ, சே போன்ற ஏனைய உலக புரட்சியாளர்களின் வரிசையில் பிரபாகரனை நிறுத்த முடியாது. பிரபாகரனோடு ஒப்பிட தகுந்த நபர்கள் யாரெனில் திருவள்ளுவர், நபிகள், வள்ளலார் போன்றவர்களின் வரிசையிலே பிரபாகரனை வைக்க இயலும்” என்கிறார் நூலாசிரியர். இயேசுநாதரால் தொடங்கப்பெற்ற கி.மு. – கி.பி. என்னும் முடிவிலா ஆட்டத்தை போல் உலக வரலாற்றில் பிரபாகரனுக்கு முன் – பிரபாகரனுக்கு பின் என்கிற முடிவிலா ஆட்டம் தொடங்கிய இடம் தான் நந்திக்கடல். நந்திக்கடல் – புதிய உலக ஒழுங்கிற்கான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பிரசவித்த தாய்நிலம்.

தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய இறையாண்மை மீட்பு அரசியல் பயணத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னகர்த்த, பிரபாகரன் கையளித்துச்சென்ற முடிவிலா ஆட்டத்தை தொடர்ந்து ஆட, பிரபாகரன் சட்டகம் என்னும் தமிழ்த்தேசிய மறைநூலின் வழியே இனி உலகத்தமிழர்கள் வழிநடக்க வேண்டியது தான் காலத்தின் கட்டாயம். பிரபாகரனியத்தையும் அதன் பல்வேறு பரிணாமங்களையும் ஆய்வது என்பது ஆழ்கடலில் சிறுகுச்சியை விட்டு அளப்பது போன்றது என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணராஜனி. இந்நூல் பிரபாகரனியம் என்னும் பெருங்கடலின் ஓர் சிறுதுளியே. இனி வரும் காலங்களில் இதுபோல் இன்னும் ஏராளமான ஆய்வுநூல்கள் படைக்கப்பட்டு வெளிவர வேண்டும். தமிழிய சிந்தனையாளர்கள் இந்நூலை மையமாக வைத்து ‘பிரபாகரனிய ஆய்வு நடுவங்கள்’ அனைத்து ஊர்களிலும் தொடங்கப்பட வேண்டும். அதன் வாயிலாக புதியதோர் அறிவுப்புரட்சி தமிழ்சமூகத்தில் பிரளயமாக வெடித்தெழ வேண்டும். அத்தகைய அறிவுப்புரட்சியை தொடங்கி வைத்த சு.சேதுராமலிங்கம் அவர்களுக்கும் நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி ஆய்வாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!

  • சந்திரன்.

நூலின் விலை: ரூ.240

விற்பனையாளர்: சிந்தனை விருந்தகம், சென்னை – 6.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

Leave a Comment