சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.
யூடியூப் சேனலில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசிய பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மதனை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்ட நிலையில் தர்மபுரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவானார் மதன்.
யாருக்கு தெரியாமல் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமை கைது செய்த காவல் துறையினர்அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மதனை கைது செய்த காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 5 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.