நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
அப்போது விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவின.பின்னர் பிரதமர் மோடி 8வது முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றினார்.
அப்போது சுதந்திரத்தை பெற்று தந்த போராட்டத் தியாகிகள், நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுக் கூறுவதாக தெரிவித்தார்.
நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் பட்ட கடும் துயரத்தை இன்றளவும் தான் உணர்வதாக மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இன்னும் சிறிது காலத்தில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் இருக்கும் அந்த திட்டம் நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்த திட்டம் உதவி செய்யும் எனவும் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.