பழுதான ரயிலை பொதுமக்கள் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பைக், கார், லாரி மற்றும் பேருந்து போன்ற வாகனங்கள் திடீரென பழுதாகி நின்றால் அதனை பொதுமக்கள் தள்ளிக்கொண்டு போவது வழக்கம்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு உக்ரைனில் உலகின் பெரிய மற்றும் அதிக பாரம் சுமந்து செல்லும் சரக்கு விமானத்தை 8 பேர் கொண்ட குழு இழுத்து சென்று சாதனைப் படைத்தனர்.
இவர்களுக்கு நாங்கள் ஒன்றும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பது போன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை கைகளால் தள்ளி சென்றனர்.
ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மக்கள் ரயிலை தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.