சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

SHARE

தமிழ்ச்சமூகம் ஓர் இருண்ட காலத்தில் உழன்று கொண்டிருக்கிறது. வாழ்ந்து செழித்த இனம் தற்போது அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றது. ஓர் தேசிய இனம் தன்னுடைய மொழியின் மீதான இறைமையை இழந்து, தன்னுடைய வரலாற்றையும் மரபறிவையும் மறந்து, தன் நிலத்தின் மீதான அதிகாரத்தை துறந்து, நாடின்றி அகதியாக அநாதையாக வாழும் காலத்தை ‘தேசிய இனத்தின் வீழ்ச்சிப் படலம்’ எனலாம். அத்தகைய வீழ்ச்சிப் படலத்தை நோக்கி அறிந்தோ அறியாமையிலோ ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. 

இந்நிலையில் வீழ்ச்சிப் படலத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சீழ்பிடித்த நமது அறிவையும் பண்பாட்டையும் சீரமைத்து ஓர் ஒளிமயமான மறுமலர்ச்சி காலத்தை நோக்கி முன்னகர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் அத்தகைய மறுமலர்ச்சி காலத்திற்கான ஓர் தொடக்கமாக விளங்கியது தான் இடிந்தகரை போராட்டம். உண்மையில் அது இடிந்தகரை அல்ல தமிழினம் எழுந்தகரை என்பது தான் சாலப்பொருத்தம். தமிழ்த்தேசிய இனம் தன் மொழியை காக்க மொழிப்போர் நடத்தியது போல் தன் நிலத்தையும் அதன் வளங்களையும் சூழலையும் காக்க நடத்திய நிலப்போர் தான் இடிந்தகரை போராட்டம். 

அந்த இடிந்தகரை போராட்டத்தை வழிநடத்திய ஆளுமைகளில் ஒருவரான சுப. உதயகுமாரன் அவர்கள் எழுதிய நூல் தான் ‘பச்சை தமிழ்த் தேசியம்’. இந்நூல் இடிந்தகரை போராட்ட சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2009 ஈழ இன அழிவிற்கு பின்பு தமிழ்நாட்டில் புதியதொரு தமிழ்த்தேசிய எழுச்சி உருவாகியிருக்கிறது. இதுவரை மொழிக்காக மட்டுமே குரலெழுப்பி வந்த இனம் இனி இனத்திற்காகவும் நிலத்திற்காகவும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்காகவும் குரலெழுப்ப தொடங்கியிருக்கிறது. அத்தகைய தமிழின எழுச்சிச் குரலை நெறிப்படுத்தி சீர்படுத்தி ஒழுங்குப்படுத்த தன்னாலான முயற்சிகளை இந்நூலின் மூலமாக வழங்கி இருக்கிறார் சுப. உதயக்குமாரன்.

இந்நூலை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தமிழ்ச்சமூகத்தின் தற்போதைய இழிநிலையையும் அதற்கான கடந்தகால அரசியல் பிழைகளையும் எடுத்துரைக்கும் கட்டுரைகளை ஒரு பிரிவாகவும், தேசிய உருவாக்கம், இந்திய தேசியம், தமிழ்த்தேசியம், தெற்காசிய பிராந்தியம் போன்ற பல்வேறு தேசிய செயல்பாடுகளை அலசும் பகுதிகளை ஒரு பிரிவாகவும், தமிழ்ச்சமூகம் மீளெம்புதலுக்கான செயல்திட்டங்களையும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டும் கனவுலக வாழ்க்கையை பிரதிபலிக்கும் பகுதிகளை ஒரு பிரிவாகவும் வகுக்கலாம். 

தமிழ்த்தேசியத்தின் பால் ஈர்ப்பு கொண்ட தமிழ் இளைஞர்கள், முற்போக்காளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் இந்நூலை ஆழமாக படித்து தெளிந்து தங்கள் செயல்பாட்டை கூர்மைப்படுத்திக் கொள்ளலாம்.

பதிப்பகம்: காலச்சுவடு

பக்கங்கள்: 160

விலை: ரூ.125

– சந்திரன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

Leave a Comment