நமது நிருபர்
ரயில் பயணம் தொடர்பான விசாரணைகள், புகார்கள் அனைத்துக்கும் ஒரே உதவி எண்ணை இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.
தற்போது ரயிலில் பயணிப்பவர்கள், பயணம் குறித்த தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல்வேறு தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு பதிலாக அனைத்து குறைகளுக்கும், விசாரணைகளுக்கும் ‘139’ என்ற ஒரே எண்ணைத் தொடர்பு கொள்ளும் வசதி ரயில்வேயில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எண்ணுக்கு அழைத்தால் இதில் உள்ள தானியங்கி சேவை மூலம் உரிய நிவாரணத்தைப் பெற இயலும். 139 என்ற எண்ணுக்கு அழைப்பவர்கள் அதன் பின்னர் பிற எண்களை அழுத்தி உரிய சேவைகளைப் பெறலாம். அந்த எண்கள்:
1 என்ற எண்ணை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பில் பேசலாம்.
2 என்ற எண்ணை அழுத்தி பி.என்.ஆர். நிலை, ரெயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை குறித்த விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
4 என்ற எண்ணை அழுத்தி பொதுப் புகார்களைத் தெரிவிக்கலாம்
5 என்ற எண்ணை அழுத்தி லஞ்சம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.
6 என்ற எண்ணை அழுத்தி பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
7 என்ற எண்ணை அழுத்தி ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரெயில்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
9 என்ற எண்ணை அழுத்தி ஏற்கனவே அளித்த புகாரின் நிலை குறித்து அறியலாம்.
* என்ற பொத்தானை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேசலாம்.
‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற பெயரில் இந்த எண்ணுக்கான விளம்பரங்களை ரயில்வேதுறை செய்து வருகின்றது.
#139 #ரயில்வே #உதவிஎண்