முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைத்தார்.
திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றுவேன் என சூளுரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்