காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

SHARE

நமது நிருபர்.

ஆப்ரிக்க நாடான காங்கோவில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உலகின் மிக அரிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. தங்கச் சுரங்கங்களில் கூட ஆயிரம் கிலோ மண்ணை சுத்தப்படுத்தும்போது 4 முதல் 8 கிராம் தங்கமே கிடைக்கின்றது. இந்த 4 கிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கம் மூடவும்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள லுகிகி என்ற கிராமத்தில் ஒரு தங்க மலை தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில உள்ளூர் வாசிகள் இந்த மலையின் மண்ணை ஆராய்ச்சி செய்தபோது, அதில் 60 முதல் 90 விழுக்காடு வரையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உள்ளூர்வாசிகள் கடப்பாறை, மண்வெட்டியுடன் அங்கு வந்து மண்ணை எடுத்துச் சென்றனர்.

இந்தச் செய்தி காங்கோ முழுக்க பரவ, பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வர ஆரம்பித்தனர். இப்படியாக மக்கள் மண்ணை அள்ளிச் சென்று தண்ணீரில் அலசி தங்கத் துகள்களை எடுப்பது தொடர்பான காணொலி ஒன்றை ஒரு பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர, அந்த காணொலி உலகம் முழுக்க பரவியது.

இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர். Ativador Office 2016

அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது தங்க மலையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள காங்கோ நாட்டின் அரசு, அங்கு பிறர் மண் எடுக்கத் தடை விதித்து உள்ளதோடு, டுவிட்டரில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மலையில் தங்கம் திருடியவர்களையும் தேடி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

Leave a Comment