“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

SHARE

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ள நேரத்தில்,
இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே . பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளியை குறைக்கும் வகையில் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளை தொடர்ந்து சந்திப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்கு மீண்டும் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

திருநங்கைகளுக்கு நிவாரணம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Admin

Leave a Comment