மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அணை கட்ட அனுமதி வேண்டுமென கர்நாடக முதல்வர் எயூரப்பா நேற்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டு கால நிறைவு பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடியை முதல்வர் எயூரப்பா சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரிடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டி பிரதமர் மோடியிடம் கோரியதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்