பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

SHARE

நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். பன்னிரண்டு வருடங்களாக பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், கண்ணசைவிலேயே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் அளவிலான காதல், குழந்தை இல்லாததால் காண்போராலும், உறவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்படும் இவர்கள், கைவிடப்பட்டவனுக்கு தெய்வமே துணையென எண்ணி ஏதேதோ வேண்டுதல்கள், விரதங்கள், கதைகதையாய் வந்த சாபத்திற்கான பரிகாரங்கள் என அதன் நீட்சியாக அவர்களின் அம்மாக்களின் கட்டாயத்தின் பேரில் தேவாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். 

இந்த “தேவாத்தா” தான் “மாதொருபாகன்”, ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் ஒற்றை வடிவம். பாமரனின் “தேவாத்தா”

மேட்டுக்குடியின் “மாச்சாமி” ஆகிறார். 

“குளுகுளுன்னு மரத்து நெழலும் பக்கத்துலயே சொனையும் வெச்சிக்கிட்டு எங்க தேவாத்தா இங்கதான் இருக்கறா. இவளக் கொண்டுக்கிட்டுப் போயிக் கோயிலுக்குள்ள அடச்சு வெச்சுக்கிட்டுப் பூச பண்றாங்க. வனத்துல தங்குண்டியாத் திரியறவள செவுத்துக்குள்ள புடுச்சு வெக்க முடியுமா? எங்கம்மா இங்கதான் இருக்கறா. அவங்க வெறுங்கல்லுக்குப் பூச பண்றாங்க” எனப் புரிதல் கொண்ட கிழவிகளையும் உள்ளடக்கிய கதை.

ஊரும் உறவும் “பிள்ளைப்பேறு” மட்டுமே ஒற்றைத் தகுதியென காளியையும், பொன்னாளையும் இம்சிக்க, காளிக்கும் பொன்னாளுக்கும் இடையே உள்ள புரிதலும், சித்தப்பாவும் மட்டுமே ஆறுதல்கள்.

கதை மாந்தர்களில் அதிகம் ஈர்த்தவர் சித்தப்பா தான். ஊரிலுள்ள ஆண்களெல்லாம் குடுமியுடன் திரியும்போது சித்தப்பா மட்டும் குடுமியை வெட்டிவிட்டு கிராப்பு வைத்துக்கொண்டு வர, பெரிய களேபரமே நடக்க, “ஊர்க் கௌரவம் என்னோட மசுரலதான் இருக்குதுன்னா நான் வளத்துக்கறன்” எனச் சொல்லி ஊர்வாயை அடைத்துவிடுவார் சித்தப்பா. சித்தப்பாவிற்கெனவே இரண்டு மூன்று பஞ்சாயத்துகள் நடக்கும், அத்தனையிலும் சித்தப்பன்தான் மாஸ் ஹுரோ.

மஹாபாரதத்தில் விசித்திரவீரியன் இறந்தபின், அரசுக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக அம்பிகாவிற்கும், அம்பாலிகாவிற்கும் என்ன நடந்ததோ; ஆண்மையற்றவனான பாண்டுவின் மனைவியான குந்திக்கு எப்படி பிள்ளைப்பேறு கிடைத்ததோ, அதே சாயலில் இந்நாவலில் ‘தேவாத்தா’விற்கு விழா எடுக்கும்போது பெருநோம்பி நாளில் பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளைவரம் தரும் எவனோவொருவன் சாமி ஆகிறான். பொன்னாளும் சாமியைத் தேடிச் செல்கிறாள். 

நூல்: மாதொருபாகன்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள்: 189

விலை: ரூ. 190

  • நிவேதிதா அந்தோணிராஜ்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

1 comment

இரத்தினவேலு August 17, 2021 at 10:21 am

மாதொருபாகன் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மிகச்சிறந்த ஒன்று; கதைக்கருவுக்கு மட்டுமன்று;யாப்பிலும் சிறப்புடையது. (குறிப்பு:பாண்டு ஆண்மை அற்றவன் அல்லன்; உடலுறவு கொண்டால் உயிர் பிர்ந்துவிடும் அவனுக்கு. அதனை மீறி இரண்டாம் மனைவியுடன் உறவு கொண்டே சாகிறான். மருமக்களை (அம்பிகை… )மாமியாரே வன்புணர்ச்சிக்கு உட்படுத்துகிறாள். பெருமாள் முருகனின் இன்னொரு சிறந்த நூல் ‘கங்கணம்’ படிக்கவில்லை பொய்ச்சாதி வெறியர்கள்! அதில் உண்மைகள் இன்னும் அப்பட்டமாக இருக்கும்.

Reply

Leave a Comment