முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் திமுக தலைவர்களை தொடர்ந்து மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தார்.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.