எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

SHARE

மொத்தம்  14 தலைப்பு  கொண்ட இந்தக் கட்டுரை தொகுப்பில் உலக சினிமா , இந்திய சினிமா, தமிழ் சினிமா  ஆகியவற்றை தனித்தனிக் கட்டுரைகளாக எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். 

முதல் கட்டுரை  உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட்  வான்கோ-வைப் பற்றிய படமான ’லவ்விங் வின்சென்ட்’ இதில் ஆரம்பித்து கடைசி கட்டுரையான ’மோடிக்லியானி’ வரை நிறைய தகவல் உள்ளன. அவற்றில்  சிலவற்றை பார்ப்போம் .

லவ்விங் வின்செண்ட் (loving Vincent) : இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதை ‘உலகின் முதல் எண்ணெய் ஓவிய திரைப்படம்’ என்று சொல்கிறார்கள் சுமார் 110 ஓவியர்களைக் கொண்டு 60,000 படங்கள் வரையப்பட்டு, அவற்றைக் கொண்டே இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள் . அந்த உழைப்பு படத்தின் டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது.

நெரூதா : அடுத்த கட்டுரை பாப்லோ நெரூதா வின் வாழ்க்கை நடந்த சுவாரசிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் குறித்தது. அந்த சம்பவம் என்ன? – என்பதை இந்த புத்தகம் படிக்கும் பொது தெரிந்துகொள்ளலாம் .

வைசிராய் ஹவுஸ் (viceroy’s house) : இந்த படம் இந்தியா பாக்கிஸ்தான்  சுதந்திரம் வாங்கும் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த படத்தில் உள்ள சாதகம் பாதகம் பற்றி பேசுகிறது இந்தக் கட்டுரை அலசுகிறது.

இவை மட்டும் இல்லாமல் கமலின் ஹேராம், கோபியின் அறம் போன்ற தமிழ் படங்கள் பற்றியும் எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். திரைப்படங்களை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்

பதிப்பகம்: தேசாந்திரி 

பக்கங்கள்: 80 

முதல் பதிப்பு: 2018

விலை: ரூ.75

  • போஜீ போஜன் (முகநூல் பதிவு)

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

மலையாள சூழலியல் நாவல் ‘என்மகஜெ’ – மதிப்புரை

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

Leave a Comment