இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

SHARE

ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கான் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 3 மாகாணங்களை தாலிபான்கள் தன் வசமாக்கியுள்ளனர்

வடக்கிழக்கில் இருக்கும் பதாக்சன், பாக்லான் மாகாணங்களில் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், மேற்கு பகுதியில் பாரா மாகாணமும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பால்க் மாகாணத்துக்கு விரைந்துள்ளார். தற்போது வரைதலைநகர் காபூலுக்கு முன்கூட்டியே இதுவரை நேரடியாக அச்சுறுத்தல் வரவில்லை. எனினும், தலிபான்களின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் எவ்வளவு நாட்கள் அரசு கட்டுப்பாட்டில் காபூல் இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த பதற்றமான சூழலில், பாதுகாப்பு கருதி ஆப்கானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற, இந்திய துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் புதிய மதிப்பீட்டின்படி, 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களிடம் வீழும் என வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

சீக்கிரமே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் அதான் நல்லது: ஜோ பைடன் பேச்சு

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

Leave a Comment