கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

SHARE

ரியாலிட்டி ஷோ – என்று அழைக்கப்படும் ஒரு வகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றையும், இந்த ரியாலிட்டி ஷோ-க்கள் எப்படி பொய்யை உண்மை போல உருவாக்குகின்றன என்ற ரகசியத்தையும், தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன?, டி.ஆர்.பி. என்றால் என்ன? – என்பவை போன்ற பல முன்னறிமுகம் இல்லாத, கட்டாயம் தெரிந்து கொள்ளவும் வேண்டிய தகவல்களையும் விரிவாகப் போட்டு உடைக்கும் ஒரு நாவல்தான் இந்த மெய் நிகரி.

மெய் அல்லாத மெய்க்கு நிகரான ஒன்று என்பது ’மெய் நிகரி’ என்ற சொல்லுக்கான பொருள். இந்த நாவலைப் படிக்கும் போது அந்தப் பொருளின் ஆழத்தை நீங்கள் உணரக் கூடும்.

விக்கிபீடியாவில் படித்தால் கூட சற்று தலை சுற்றலாம் – அந்த அளவுக்கு கடினமான உள்ளடக்கங்கள் இந்த நூலில் உள்ளன. ஆனால் அவற்றைக் கபிலன் வைரமுத்து போகிற போக்கில் மிக எளிமையாக விளக்கி உள்ளார்.

தமிழில் காட்சி ஊடகங்கள் தொடர்பாக வந்துள்ள ஒரே விரிவான படைப்பு என்று இதனைச் சொல்லலாம். முன்னர் கிருஷ்ணா டாவின்சி-யின் எழுத்தில் வந்த நான்காவது எஸ்டேட் நாவல் ஊடகங்கள் குறித்துப் பேசி இருந்தாலும், காட்சி ஊடகங்களை அந்தப் படைப்பு உள்ளிட்ட எந்தப் படைப்பும் இவ்வளவு விரிவாக விளக்கியது இல்லை.

டெரனஸ் பால் என்ற சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தனது 4 நண்பர்களுடன் இணைந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை வடிவமைத்தார்? – என்ற ஒரு வரிக் கதையை அடிப்படையாகக் கொண்டு முழு காட்சி ஊடகத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் எழுத்துப் பயணமாக செல்கிறது இந்த நாவல். அளவில் சிறிய நாவல் என்றாலும் வாசிப்பு அனுபவம் நிறைவாகவே உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைபடம் இந்த மெய் நிகரி நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான். 2016ல் இந்த நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் உள்ள தற்காலத் தமிழ் இலக்கியம் பகுதில் இந்த நாவல் பாடமாகச் சேர்க்கப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 2021ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த சிங்கப்பூர் வாசிப்பு விழாவிலும் இந்த நாவல் இடம் பெற்றது.

இப்படி இன்னும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள நாவல் இது. நாவல் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களும், ஊடகத்தில் என்ன நடக்கிறது? – என்று அறிந்து கொள்ள விரும்புபவர்களும் கட்டாயம் மெய் நிகரியை வாசிக்கலாம். 2014ல் எழுதப்பட்ட நாவல் இப்போதும் பொருந்துகின்றது.

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை: ரூ.200

இணையத்தில் வாங்க: www.discoverybookpalace.com

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

Leave a Comment