கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை சிவப்பு பானை, உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இங்கு சுடுமண் பகடை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்