இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013-14 ஆம் ஆண்டில் வைகை நதிக்கரையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ தூரம் ஓடும் வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள 400 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொண்டது
ஓர் ஆண்டு முழுவதும் இந்த 400 கிராமங்களில் அலைந்து திரிந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் 263 புதை மேடுகளையும் 90 வாழ்விடங்களையும் இனம் கண்டார்கள்.
இதில் கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர்களின் பொருட்கள் நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்குடி சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு பறை சாற்றி வருகின்றது.
கீழடி தமிழர்களின் தாய் மடி என்ற சொல்லுக்கு ஏற்ப தினமும் பல பொருட்களை அகழாய்வில் கொடுத்து நம்மை பெருமைபடுத்தி வருகிறது கீழடி .
இந்த நிலையில் கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சை படுத்தும் வகையில் துக்ளக் எழுதிய கட்டுரை தமிழ் ஆர்வளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்டுரைக்கு தொல்பொருள் ஆய்வு வெட்டி வேலை என தலைப்பிட்டு எங்கு தோண்டினாலும் வெறும் மண்டை ஒடுகளும் ஆயுதங்களும்தான் கிடைகின்றன.
இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டினால் கூட இதுதான் கிடைக்கும்.தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஒரு வெட்டி வேலை என தெரிவித்துள்ளது.
ஆதிகாலம் முதற்கொண்டே உலகம் முழுக்க தமிழர்கள் பரவியிருந்தனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில் துகளக்கின் இந்த கட்டுரைக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
“இந்தியாவில் ஓடவே இல்லை – என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட சரஸ்வதி ஆற்றைத் தேட, இந்திய அரசு ஒன்றிய பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியது, ஆனால் ஆறும் கிடைக்கவில்லை, அதன் நீரும் கிடைக்கவில்லை. மொத்த தொகையும் வீண் செலவாகிறது. ஆனால் அதை எதிர்க்காதவர்கள், ஆய்வில் ஆதாரங்களை அள்ளிக் கொடுக்கும் கீழடி ஆய்வை வெட்டி வேலை என்பதா?” – என்றும்,
“கொரோனா பரவலைத் தடுக்க மணியடித்து கைத்தட்டியவர்கள், ஆக்கபூர்வ வேலைகள் பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுப்பதா?” – என்றும்,
“ஆரியர்களின் தடங்கள் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் தொல்லியல் ஆய்வுகளுக்கு எதிரிகளாகிவிட்டார்கள்” – என்றும் சமூக வலைத்தளங்களில் பல வகையிலும் இந்த செய்தி விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.