நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முதலில் ஹைதராபாத்தில் மட்டும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கின.
இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதிகளின் கோவாக்ஸின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டது. இதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது என என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு தொகுதி கோவாக்ஸின் தயாரிப்பு மட்டும் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் 3வது மற்றும் நான்காவது தொகுதி தயாரிப்புகள் நன்றாக உள்ளதால் அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்