75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்று வழங்கியுள்ளது.
அதன்படி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகனங்களின் பதிவு எண்களில் 75 என இருந்தால் அந்த வாகனங்களுக்கு ரூ.75 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்