தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

SHARE

கொரோனா பரவல் துவங்கி 3 வருடங்கள் ஆகிய நிலையில் இப்போதும் விட்டு ஒழியாமல் கொரோனா பரவல் மக்களிடையே இருந்து வருகிறது. தினசரி லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தற்போது சற்று குறைந்து ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை தினசரி கூடிவரும் நிலையிலும், புதிய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி 22 ஆக இருந்த தமிழக தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 100 ஐ தாண்டி இருப்பது சற்று கவனிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 32 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில்,

கொரோனா பரவல் என்பது சமூக பரவலாக மாறியதால் தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதனை சமாளித்து வாழ பழகிக்கொள்ளவேண்டுமே தவிர, கொரோனா முற்றிலும் போய்விட்டது என்று எண்ண கூடாது. மக்கள் தன்னோழுக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

Leave a Comment