கொரோனா வைரசின் முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியான செய்திகளில், உகானில் உள்ள ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அரசு கூறுகிறது.
அதே சமயம் அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என சீன அரசு பதில்கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதனால் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் முன்னாள் அதிபர் டிரம்ப், “நான் அப்போதே கூறினேன் சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று… நான் கூறிய கருத்தை இப்போது எதிர் கட்சியினரும் சொல்லத் தொடங்கி விட்டனர். கொரோனாவைரசினை பரப்பி பேரழிவு ஏற்படுத்திய சீன அரசு அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும்” கூறியுள்ளார். டிரம்ப் தற்போது பதவியில் இல்லை ஆனால் சீன அரசின் மீதான விமர்சனங்களை டிரம்ப் இப்போது வரை மாற்றிக்கொள்ளவில்லை