85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

SHARE

நடப்பு கல்வியாண்டில் 85% கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின்போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கட்டணம் வசூல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

Leave a Comment