இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறை தேவைப்படாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலைக்கு பின், உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதையடுத்து அங்கு உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பிற நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டன. பல மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக அங்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஜூலை 21ம் தேதி முதல் ஊரடங்கிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படும் என ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜூலை 19ம் தேதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும், எனவே இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.