குளத்தில் மூழ்க இருந்த மான்குட்டியை, நாய் ஒன்று காப்பாற்றி, அதனுடன் நட்பு பாராட்டும் வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. விர்ஜினியாவை சேர்ந்த ரால்ஃப் டோர்ன் என்பவர் அண்மையில் தனது வளர்ப்பு நாயின் செயலை பாராட்டி முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், அவரது வளர்ப்பு நாய் ஹார்லி, வீட்டின் பின்புறம் உலாவிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளத்தில் மான்குட்டி ஒன்று மூழ்க இருந்ததை கண்டு ஓடோடிச்சென்று காப்பாற்றி உதவியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான்குட்டி தனது மூக்கை, ஹார்லியின் மூக்குடன் நேருக்கு நேர் உரசியதோடு, நட்பு பாராட்ட தொடங்கியுள்ளது. மேலும் தினமும் ஹார்லியை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
ஹார்லியும் பதிலுக்கு மான் குட்டியின் உடலை நாவால் முத்தமிட்டு தனது அன்பினை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.