தன்னை திருமணம் செய்வதாக கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்
திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யக் கூறியதாகவும் இதனால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.இதனையடுத்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்ததாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. எனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரையில் தலைமறைவாகி இருப்பதாக வந்த தகவல் கிடைத்து. இதனையடுத்து 2 தனிப்படை போலீசார்,மதுரைக்கு விரைந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை போலீசார்,பெங்களூரில் இன்று கைது செய்துள்ளனர்.மேலும்,அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.