மியாமி கால்பந்து விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் பூனை ஒன்று தடுமாறி விழ, பார்வையாளர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மியாமியில் கல்லூரி கால்பந்து விளையாட்டு அரங்கில் ஏராளமான பார்வையாளர்கள் கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் சைடில் இருந்த சுவரில் நடந்து சென்ற பூனை ஒன்று கால் தடுமாறி அந்தரத்தில் தொங்கியுள்ளது.
இதனை பார்த்த கால்பந்தாட்ட பார்வையாளர்கள் போட்டியை விட்டு விட்டு பூனையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பூனையானது கீழே விழ அதனை பார்வையாளர்கள் பிடித்து காப்பாற்றினர். இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்