பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான நிறுவனம் பதஞ்சலி நிறுவனம் மூலிகை பொருட்கள், சோப்பு, பேஸ்ட், நூடுல்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக கொரோனில் என்ற மருந்தை கண்டுபிடித்தாக விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு தர வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி சங்கம் என்ற விதிகளின் படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்டும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.