“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

SHARE

நடிகர் விஜய், சிஎஸ்கே அணி கேப்டன் தோனியின் சந்திப்பை மதுரை ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடியுள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

ஆஸிிt

இதனிடையே இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஒரு விளம்பர பட ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவில் நடந்த நிலையில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், மதுரையில் வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது .

அதில் PM என எழுதப்பட்டு அதன் அருகில் தோனி புகைப்படமும், CM என எழுதப்பட்டு அதன் அருகில் விஜய் புகைப்படமும் உள்ளது.

அதற்கு கீழ் “ஆளப்போகும் மன்னர்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி… ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

Leave a Comment