மலையாள சூழலியல் நாவல் ‘என்மகஜெ’ – மதிப்புரை

SHARE

என்மகஜே என்னும் இந்நூல் ஒரு மலையாள நாவல். 1980 – 90களில் மலையாள தேசத்தின் மலைப்பகுதிகளில் உள்ள முந்திரி காடுகளில் எண்டோசல்ஃபான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தால் ஏற்படுத்தப்பட்ட பேரிழப்புகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது.

ஆசிரியர் அம்பிகாசுதன் மாங்காடு அந்நிகழ்வை ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு உள்ளார். அது சரியான உவமையும்கூட. எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியின் விளைவாக சொர்க்கம் என்ற ஒரு ஊரும் அதை சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டன, அங்குள்ள மக்களுக்கு எவ்வகையான குறைபாடுகள் ஏற்பட்டன? – என்பவை குறித்து படிக்கும்போதே வயிற்றின் உள்ளே இருந்த ஏதோ ஒரு உணர்வு வாய் வரை வந்துவிடுகிறது.

இந்த பேரழிவு ஹிரோஷிமா நாகசாகியை விடக் கொடுமையானது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலி ஆக மாறிய அரசின் அலட்சியத்தால் நேர்ந்த ஒரு கொடூர கொலை என்றே இந்நிகழ்வு இன்று வரை பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நாவலில் நகரத்திலிருந்து சென்று, பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட சொர்க்கம் என்ற ஊரின் மலைப்பகுதியில் குடியிருப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழும் ஒரு கல்யாணமாகாத தம்பதி எவ்வாறு சுற்றியுள்ள மக்களுக்காக எப்படிப் போராடுகிறார்கள்? தங்கள் எதிர்ப்பை தெரிவித்து எப்படி அந்த அழிவை இதை தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்பதே கதைக்கருவாக எடுத்தாளப்பட்டு உள்ளது. 

ஆனால் ஆசிரியர் நாவலை முழுவதுமாக போராட்டக்களத்தில் முடிக்காமல் கடைசியில் இயற்கைக்கு மனிதன் செய்த தீமைகளுக்கு இயற்கை நிச்சயம் பதில் சொல்லும் என்ற கருத்தோடு நாவலை முடித்து உள்ளார். என்டோசல்பான் பற்றிய கொடுமைகளைத் தெரிந்துகொள்ள படித்துப் பார்க்க வேண்டிய ஒரு நூல்.

நூல்: என்மகஜே

ஆசிரியர்: அம்பிகாசுதன் மாங்காடு

தமிழில்: சிற்பி

பதிப்பகம்: கவிதா வெளியீடு

பக்கங்கள்: 288

விலை: 200

  • சங்கர் மனோகரன் (முகநூல் பதிவு)

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

கோவி.லெனின் எழுதிய ’வி.பி.சிங் 100’ – நூல் மதிப்புரை

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment