என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

SHARE

கு.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நன்னெறிப் பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இதுவாகும். பத்துக்கும் குறைவான வயதில் மணமுடிக்கப்பட்ட ஒரு ஏழைப்பெண்ணின் உண்மைக்கதையே இந்நூல்.

1929 ல் இந்தியாவில் குழந்தைமணம் தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், உலகில் குறிப்பாக அரபிநாடுகளில் இது சாதாரணமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அரபிப் பெண் எழுத்தாளர்களின் கதைகளில் தவறாது இடம்பெறும் அம்சம் சிறுமிகளைப் பெற்றோர் திருமணத்திற்கு வறுபுறுத்துவது. 

அங்கு உள்ள லட்சக் கணக்கான கண்ணீர்க் கதைகளில் இன்னொரு கதையாகவே நுஜூத்தின் கதை முடிந்திருக்கும், அவர் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால்…

ஒரு குழந்தையின் பார்வையில் ஏமன் நாட்டின் கிராம வாழ்க்கை சொல்லப்படுகிறது. கிராமத்தில் மரியாதையோடு வாழ்ந்தவர்கள், நகரம் வந்ததும் அவமானப்படுவது தமிழ்நாட்டைப் போலவே ஏமனிலும் நடக்கிறது. Adulteryக்கு மரணதண்டனைக்கு வாய்ப்புள்ள ஏமனிலும் அது நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

வறுமை, வறுமை தான் குழந்தை திருமணங்களுக்குக் காரணமாக அமைகிறது. ஒரு வயிற்றுச் சோறு குறையும், சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் கிடைக்கும் என்று சிறுமிகள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். ஹைதராபாத்தின் பல சோகக்கதைகள் நமக்குத் தெரிந்தவை. வசதி இருக்கும் யாரும், எந்த மதத்தினரும், எந்த நாட்டினரும் குழந்தை திருமணத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் அரபுநாடுகளில் பெண்கள் படித்தால் கெட்டுப்போவார்கள் என்ற எண்ணத்தால் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது இன்றும் தொடர்கிறது.

கணவனின் தொடர் பாலியல் வல்லுறவிற்குப் பிறகும், தன் வயது சிறுமிகளுடன் விளையாட வேண்டும் என்று கெஞ்சிக்கேட்கும் சிறுமியின் வாழ்வு நம்மை நிலை குலைய வைக்கிறது. இந்த நூல் ஏற்கனவே 38 மொழிகளில் வெளிவந்த ஒன்று, 39ஆவதாக இப்போது தமிழில் வெளியாகி உள்ளது. தடங்கலே இல்லாமல் படிக்கக்கூடிய சரளமான மொழிபெயர்ப்பு ஜெயசீலனுடையது. 

ஒரு ஆவலில் இப்போது நூலில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். 

நுஜூத் பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டு 2016ஆம் ஆண்டின்  நிலவரப்படி இரண்டு குழந்தைகளின் தாயாக உள்ளார். ஆனால் அவர் நினைத்தது போல் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அவரது மாஜிக்கணவர் நான்கு மனைவிகளுடன் சுகபோக வாழ்வு வாழ்ந்து வருகிறார். சாம்சன் கடைசியில் தன் மொத்த பலத்தையும் உபயோகித்தது இதற்குத்தானா என்று யோசித்திருக்கிறேன் முன்பு. இப்போதும் அந்த நினைவு வந்தது. 

பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்  

விலை ரூ.180.

– சரவணன் மாணிக்கவாசகம் (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

ஒடுக்கப்பட்ட பெண்மையின் கதை சொல்லும் ‘தவ்வை’ நாவல் – நூல் மதிப்புரை

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

Leave a Comment