நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
அதனைடிப்படையில் இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு எரிபொருள் விலை உயர்வை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் ராஜஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தமிழகத்திலும் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.