வங்கதேசத்தில் உலகிலேயே குள்ளமாக கருதப்படும் பசுவை காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுதான் உலகிலேயே குள்ளமான பசுவாக கருதப்படுகிறது.
இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ கொரோனா விதிமுறைகளையும் மீறி இந்தப் பசுவை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். பலர் பசுவுடன் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ. ஆகும்.
இந்நிலையில் 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்