தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு தவிர்த்து பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் எனவும், அனைத்து வேலை நாட்களிலும் பேராசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.