சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்புபணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது.
கருத்து வேறுபாடு காரணமக இந்த விண்வெளி நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது.
இதனால், தமக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தியான்ஹோ என்ற பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்திற்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எரிபொருள், விண்வெளி உடைகள், உணாவுப்பொருட்களுடன் தியான்சோ-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்களை, சென்ஷூ 12 என்ற விண்கலத்தில் சீனா அனுப்பியுள்ளது.
இவர்கள் 3 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என சீனா தெரிவித்துள்ளது