உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளின் இருக்க வேண்டியது. ஆனால் கடந்த 12-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நாரிமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதிகள் எண்ணிக்கை 25 ஆக குறைந்தது.
இதுவரை நீதிபதிகள் நியமனம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 9 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 3 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலிஜியம் குழு பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்