தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் பொருளாதார வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெட்ரோல்,டீசல் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், கடந்த வாரம் சிமெண்ட் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படுவதாக கட்டுமான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்ததோடு, கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வால் ஏழை,எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் சிமெண்ட் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.