தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் சிமெண்ட் விலை கடந்த 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்தது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்ரூ490 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலையானது 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலையானது 1100 ரூபாய் வரையிலும் குறைக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை தெரிவித்தார்.
இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவித்த விலையிலிருந்து மேலும் ரூ.25 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்கடந்த 2 நாட்களில் சிமெண்ட் விலை 55 ரூபாய் சரிந்து ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.435 க்கு விற்பனை ஆக உள்ளது. இது கட்டுமான துறையினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியை அளித்துள்ளது.