சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியதால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு மத்திய கல்வி வாரியம் 13 பேர் அடங்கிய குழுவை அமைத்தது.இந்த குழுவான தனது பரிந்துரையை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறையை உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழுக்காடும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழிக்காடும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 40 விழுக்காடும் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பை பொறுத்த வரை மொத்தம் உள்ள 5 பாடங்களில் அதிக பட்ச மதிப்பெண் எடுத்த 3 பாடங்களின் மதிப்பெண்களை கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதுவே பன்னிரெண்டாம் வகுப்பை பொறுத்த வரை பருவ தேர்வு மற்றும் செய்முறை தேர்வின் மதிப்பெண்களை கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.