குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

SHARE

குதிரை உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை கண்டித்து மேனகாகாந்தி புகார் அளித்துள்ளார்

மத்திய பிரதேசத்தில் முதல்வராக உள்ள (பாஜக)ம சிவ்ராஜ் சிங் சவுகான். அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் நேற்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடைபெற்றது

. இந்த யாத்திரையின் போது ஒரு குதிரைக்கு உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

முன்னாள் நகராட்சி கார்ப்பரேட்டர் ராமதாஸ் கார்க், யாத்திரையில் குதிரையை வாடகைக்குக் கொண்டு வந்து, இப்படி அழைத்து சென்றார்.

குதிரையின் உடல் முழுவதும் வர்ணம் பூசி இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டு மேனகா காந்தியின் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (PFA)விலங்குகள் நல அமைப்பு இந்துார் கிளை நிர்வாகி, சன்யோகீதாகஞ்ச் கொதித்தெழுந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய என்று அவர் புகாரில் தெரிவித் திருக்கிறார்.

மேலும், மத்திய அமைச்சருக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி, ஒரு அமைச்சரே இப்படி நடந்துகொள்ளலாமா, இதை தடுத்திருக்க வேண்டாமா என கேள்விஎழுப்பியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

Leave a Comment