பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

SHARE

முந்தின நாள் இரவில் ஆரம்பித்தது பிக் பாஸ், இரவில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் என‌ மூவர் கூட்டணியினர் பேசிக்கொண்டிருந்தனர். ‘நான் ஏன் சிபிக்கு மாலை போட்டேன் என்றால், ராஜூவுக்கு என்ன மவுசு இருக்குன்னு பாக்கத்தான்’ என்று பிரியங்கா கூற, ‘அவன் சைலண்ட்டா இருந்து ஒரு கேம் ஆடுறான்’ என்று அபிஷேக்கும் கூற, ராஜு மேல் இவர்களுக்கு இருக்கும் காண்டு பச்சையாக தெரிந்தது.

“சின்ன மச்சான்.. செல்ல மச்சான்.. ஊருக்குள்ள உங்கள ஏசுறாக…” பாடலுடன் தொடங்கியது நாள். அதைப் பார்க்கும் போது ராஜூவிற்கு பிக் பாஸ் எதையோ சூசகமாக சொல்கிறாரோ? – என்றுதான் தோன்றியது. ஆனால் அந்த பாடலுக்கு ராஜூ மற்றும் தாமரையின் ஆட்டம் அருமை. பாவ்னி, ராஜூவின் கிச்சன் பிரச்சனை அடுத்த நாளும் பேசப்பட்டது. (அட இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி… யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு…) அக்ஷரா வழக்கம்போல் ராஜூவிற்கு ஆதரவாகவும் பாவ்னிக்கு எதிராகவும் பேசினார்.

இப்படியே பேசி பேசி மாலை 6 மணிக்கு இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கே வந்துடுச்சு. இந்த டாஸ்க் மூலம் நாமினேஷனில் இருந்து தன்னையோ அல்லது நாமினேஷனில் இருக்கும் தன்னுடைய நண்பர்களை காப்பாற்றும் வாய்ப்பும் ஹவுஸ்மேட்ஸ்க்கு கிடைத்தது. அது சரி…… விளையாட்டுன்னு ஒண்ணு விளையாடினா தானே அவங்க அவங்க யாருன்னு தெரியும். அந்த டாஸ்க்கின் பெயர் பஞ்சதந்திரம்.

அந்த போட்டியில் 5 நாணயங்கள் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்படும், அந்த நாணயத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து, நான் எடுத்து விட்டேன் என்று பிக் பாஸிடம் கேமராவில் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த பஞ்சதந்திரம் போட்டி. நாணயம் எடுக்கும்போது யாராவது பார்த்தாகக் கூறினால், அந்த நாணயத்தை வைத்து விட வேண்டும், அது அவர்களுக்கு சேராது. ஒருவர் எத்தனை நாணயம் வேண்டுமானாலும் எடுக்கலாம். மாட்டினால் பாதாளச் சிறைக்குப் போக வேண்டும்.

இந்த டாஸ்க்கை கூட்டு முயற்சியினால் சுலபமாக தட்டித்தூக்கி விடலாம் என்பது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்க்கும் விளங்கியது. அவரவர்கள் நாணயங்களின் முன் மற்ற ஹவுஸ்மேட்களிடம் செய்கைகள் மூலம் நீ மறைச்சுக்கோ நான் எடுத்துக்குற, பவர் கிடைத்தால் உனக்கும் உதவுகிறேன் என்று கூறி கூட்டணி அமைக்க ஆரம்பித்தார்கள்.

இப்போதுதான் யார் யார் யாருக்கூட ஒத்துப்போகிறது என்று தெளிவாக தெரியத் தொடங்கியது. முதல் நாணயத்தை இமான் அண்ணாச்சியின் உதவியால் ஐக்கி எடுத்து பாத்ரூமில் ஒளித்து வைத்தார். இதை கவனித்த அக்ஷரா, எடுக்கும்போது ஏன் காட்டிக்கொடுக்கணும், பேசாமல் அவர் ஒளித்து வைக்கும் இடத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று அதிரடியாக இறங்கினார். என்ன ஒரு ராஜ தந்திரம்…

தாமரை நாணயத்தை எடுக்க முயற்சி செய்யாமல், யாராவது அதை எடுத்து எனக்கு உதவி செய்வார்களா என்று அழுதுக்கொண்டிருக்க, ‘நான் இருக்கிறேன் உனக்கு’ என்று முன்னால் வந்தார் அபிஷேக். தாமரையும் என்ன எப்படியாவது காப்பாத்திடுடா என்று தேவையில்லாமல் அவன் காலில் விழ, அபிஷேக்கும் ‘ச்ச, ச்ச அழக்கூடாது’ என்று தாமரையை தூக்கி கட்டி அணைத்து… ஆறுதல் சொல்லி… சிவாஜிக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருந்தார். முடியலடா அபிஷேக்.

யாரை வைத்து நாணயத்தை எடுத்தால் நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று அபிஷேக்குக்கு நன்றாகவே தெரியும், அழகா தாமரையையும், சின்னபொண்ணுவையும் மூளைசலவை செய்து, எனக்கு கிடைச்சா உங்கள் காப்பாத்துறேன்னு சொல்லி அலேக்காக நாணயத்தை எடுத்துக்கொண்டார்.

ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்து, மதுமிதாவும் தனக்கென்று ஒரு நாணயத்தை எடுத்து ஒளித்துவைத்துக் கொண்டார். ஆனால் பாவம், தைரியமாக எடுத்தாலும் அதை எப்படி ஒளிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு என்று முழித்துக் கொண்டிருந்தார். ஆனால் மதுமிதா தனக்காக எடுக்கவில்லை ஏனென்றால் அவர் நாமினேஷனில் இல்லை, அவர் இசைக்கு உதவுவதற்காக எடுத்தார். மதுமிதா நீ ரொம்ப நல்ல பொண்ணுதான்ம்மா…

இந்த களேபரத்தில் பாவ்னி ஒரு நாணயத்தை சுட்டுவிட, பிறகு பாவ்னியும், மதுமிதாவும் கூட்டணி அமைத்து ஒன்றாக ஒளித்து, அதற்கு காவலாக அபினய்யை வைத்தனர். இதை கவனித்த நிரூப், அதை எடுக்க போய் அபினயிடம் மாட்டி ஜெயிலுக்கு சென்றார். ‘நான் ஜெயிலுக்கு… நான் ஜெயிலுக்கு போறேன்…’ன்னு ஜாலியாக கிளம்பினார். அந்த இரண்டு நாணயங்களும் மறுபடியும் வெளியில் வைக்கப்பட்டன‌. அடுத்து அபிஷேக் அவன் நாணயங்களை பிரியங்காவிடம் கொடுக்கும் போது மாட்டிக்கொள்ள, இடையில் சுருதியும் மாட்டிக்கொள்ள, மூவரும் ஜெயிலில் தஞ்சம் அடைந்தனர்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment