பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

SHARE

கமலின் வருகையுடன் ஆரம்பித்தது பிக் பாஸ். பண்டிகை தினங்களின் கொண்டாட்டம், கேளிக்கைகளால் மக்களின் அன்பும் சந்தோஷமும் அதிகரிக்கரிக்கிறது, வியாழக்கிழமை விடுப்பட்டவைகளையும், வெள்ளிகிழமை நடந்தவைகளையும் காணலாம் என்று கூறி  திருவிழா நாடகம் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினர் கமல். 

நாடகம் நடக்கும்போதே மன்னிப்பு கேட்டாச்சேன்னு விடாமல், சின்னபொண்ணு நள்ளிரவு வரை பிரச்னையை இழுத்து சென்றார். அபிஷேக் அதன் பிறகு சின்னபொண்ணுவிடம் வந்து நடந்தவற்றை விளக்கி மறுபடியும் மன்னிப்பு கேட்டார். 

வீட்டில் காணாமல் போனவர்கள் பட்டியலில் மதுமிதா பெயர் இருப்பது மதுமிதாவிற்கு தெரியவர, ’என்னை டார்கெட் செய்கிறார்கள்’ என்று பாத்ரூமில் பாவ்னியிடம் கூறினார். அதற்கு பாவ்னி, ’யாரையும் நம்பாதே, இங்க எல்லாரும் டபுள் ரோல் பிளே பண்றாங்க’ ன்னு ஆறுதல் கூறினார். 

’நான் இனிமே தான் என் ஆட்டத்தை ஆரம்பிக்கப்போறேன்’ன்னு மேடையிலேயே நடக்க ஆரம்பித்தார் அபிஷேக். விடிந்தவுடன் மூவர் குழு இறுதி முடிவு எடுக்க ஒன்று கூடினர். ஜொலிப்பவர்களில் ராஜூவை தட்டி அந்த இடத்தில் இமான் அண்ணாச்சியை உட்கார வைத்தார் அபிஷேக். இதற்கு பல காரணங்களை கூறினார். ஆனால் அக்ஷராவும், பாவ்னியும் பாவம், அபிஷேக் அவர்களை மூளை சலவை செய்கிறார் என்று பார்க்கிற நமக்கே தெரிகிறது, ஆனால் அந்த ரெண்டு பேரும் அவன் சொல்வதையே ஒப்புக்கொண்டனர். 

அடுத்து அகம் டிவி வழியாக வந்தார் கமல். வீட்டின் தலைவருக்கு வணக்கம் வைப்பதுபோல் அவரிடம் இருந்து ஆரம்பித்தார் கமல். அந்த வாரம் முழுதும் நடந்த பிரச்சனைகளை பற்றி கேட்க ஆரம்பித்தார். தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் அபினயின் செயலையும், அதற்கு பதிலடி கொடுத்த ஐக்கியையும் பாராட்டினார். 

சின்னபொண்ணு தன் பந்தை தானே உடைத்துக் கொண்டதைப் பற்றிக் கேட்டார். ’வெற்றி உங்களுக்கோ தாமரைக்கோ இல்ல, கலைக்குத்தான்’ என்று சாலமன் பாப்பையா போல் சமமாக தீர்ப்பளித்தார். அப்புறம் பிரியங்காவிடமும் உங்க மேட்ரிமோனியல் வேலை ரொம்ப நல்லா இருக்குன்னு நக்கலாக கூறினார். 

அக்ஷராவின் கதை தன் சொந்த கதையோடு ஒத்துப்போவதாக கூறினார் கமல். ராஜூ கதை சொன்ன விதத்தையும் பாராட்டினார். பின்னர் அக்ஷராவின் அழுகைக்கு என்ன காரணம்? – என்று போட்டு வாங்கினார் கமல், அதற்கு அக்ஷராவும், பிரியங்காவின் கமெண்ட் கஷ்டப்படுத்தியதாக கூறினார். 

பிரியங்காவும் ’இந்த மாதிரி கமெண்ட்ஸ்லாம் சொல்லி அவள இன்னும் ஸ்டாரங்க் ஆக்கின சார்’ அப்டின்னு சொல்ல, அதில் பிரியங்கா சமாளிச்சது பச்சையாகத் தெரிந்தது. 

ராஜூவிடமும் உங்க கருத்தை மற்றவர்கள் விமர்சிப்பதால் மாற்றுவது சரியாகுமா என்றும் கூறி, உங்க மூவருக்கும் கூறுவது ஒன்று தான், நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்று அறிவித்தார் கமல். 

அடுத்து நிரூப், அண்ணாச்சி காப்பாற்றப்பட்டார்கள். அடுத்து இசைவாணி, மதுமிதா, சிபி, அபினய், ஐக்கி ஆகியோரும் காப்பாற்றப்பட்டார்கள். மீதம் இருந்த ஐவரின் முடிவுகள் நாளைக்கு என்று விடைபெற்றுக் கொண்டார் கமல். 

அடுத்து டைனிங் டேபிளில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி பேசிக் கொண்டிருந்தார்கள், ’யாரும் எங்கிட்ட பேசலைன்னு குறை சொன்னா எப்படி, பேசுறதுக்கு நீங்க தான் முயற்சி செய்யணும்’ என்று அண்ணாச்சி சொல்ல, ’அவங்க பேச வந்து நாம பேசாம போன மாதிரி சொல்றாங்களே’ என்று நக்கலாக கூறினார் பிரியங்கா.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

Leave a Comment