பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

SHARE

“சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…” பாடலுடன் தொடங்கியது நாள். பெட்ரூமில் பிரியங்கா மற்றும் நிரூப் மைக் போட்டுக் கூட சத்தமே வராமல் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏதோ லவ் மேட்டர் பத்தி பேசுறாங்கன்னு தெரியுது, ஆனா யார் அந்த ரெண்டு பேர்ன்னு தெரியல (லவ் பண்ற அளவுக்கு இந்த வீட்ல ஆளுக்கலே இல்லையே, யாரு யார லவ் பண்றாங்கன்னே புரியல… எல்லா ஆம்பளைங்களும் கல்யாணம் ஆனவங்க, நிரூப்ப தவிர.. வேற யாரா இருக்கும்….?).

’வைல்ட் கார்டு எண்ட்ரியா ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்கும்’னு நிரூப் கேட்க, ’எந்த மாதிரி பொண்ணு உங்களுக்கு வேணும்’னு பிரியங்கா கேட்க, ’அழகா, மத்தவங்க பொறாமைப்படுற அளவுக்கு இருக்கணும்’னு சொல்ல, ’இந்த பிரியங்கா மேட்ரிமோனில சொல்லிட்டீங்கல.. உங்களுக்கு நல்லபடியா அமையும், மேட்டர் உன்னோடது மணி என்னோடது’ ன்னு பிரியங்கா சொல்ல… இந்த் பிக் பாஸ் வீட்ல என்ன தாண்டா நடக்குது மொமண்ட்.

கடைசியாக கதை சொல்லட்டுமா டாஸ்க்குக்கு வந்தவர் ராஜூ (ஒரு வழியா டாஸ்க்  முடிஞ்சது). சும்மா சொல்லக்கூடாதுங்க கதாசிரியர்… கதாசிரியர் தான். அருமையாக கதை சொன்னார் ராஜூ. தன்னோட தாத்தாவுல ஆரம்பிச்சு, தன் பேரோட காரணம், சொந்தங்களின் சலசலப்புகள், அப்படிப்பட்ட சொந்தங்களையே ஒன்று சேர்க்கும் சினிமாவால் ஈர்க்கப்பட்டு, சினிமா மீது கொண்ட காதல், முதல் குறும்படம் திரையிடும் போது ஏற்பட்ட தந்தையின் மரணம் ஒரு பக்கம், ஆனால் அதே குறும்படத்தால் பாக்யராஜின் அறிமுகம் மறுபக்கம் – என்று நல்ல திரைக்கதையாக சொல்லி முடித்தார். ஏசு பிரான் 30 வயசுக்கு அப்புறம் தான் அற்புதங்கள் நிகழ்த்தினார், எனக்கு இப்போ 30 வயசு ஆயிடுச்சு, ஐ ஆம் வெய்யிட்டிங் ஃபார் மை அற்புதங்கள் என்று சொல்லி முடித்தது நன்றாக இருந்தது. 

அடுத்த பிக்பாஸின் டாஸ்க்கை படித்தார் அபிஷேக். இந்த வீட்டில் எதிலும் ஈடுபடாமல் காணாமல் போன இருவரையும், அனைத்து விதமான வேலைகளையும் செய்து ஜொலிப்பவர் என்று ஒருவரையும், மூவர் கொண்ட குழு மூலம் தேர்ந்தெடுக்கும்படி பிக் பாஸ் கூறியிருந்தார். அந்த குழுவில் இருக்கும் மூன்று பேர், அபிஷேக், அக்ஷரா, பாவ்னி. அவர்கள் யார் என்று திருவிழாவின் முடிவில் அறிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார். 

மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸும் தங்களின் முடிவுகளை மூவர் கொண்ட குழுவில் தெரிவித்தனர். ஜொலிப்பவரில் பெரும்பாலானோர் சொன்ன பெயர்கள் ராஜூ, இமான். காணாமல் போனவர்களில் சொன்ன பெயர்கள் சின்னபொண்ணு, நாடியா, மதுமிதா. ஜொலிப்பவர்கள் பெயரில் ராஜூ பெயர் முடிவு செய்த போது, ’எண்டர்டெய்ண்மெட் மட்டும் வெச்சி சொல்லக்கூடாது’ என்று அபிஷேக் புகைய ஆரம்பிச்சார். 

பூஜை பொருட்கள் மற்றும் திருவிழா பொருட்கள் அனைத்தும் வந்தன. வந்த ஸ்வீட்ஸில் ஒன்றை திருட்டுத்தனமாக சாப்பிட்டு விட்டார் பிரியங்கா, உடன் அபினய் வேறு. பூஜை சாப்பாட்ட திருட்டுத்தனமா சாப்பிட்டா சாமி கண்ணைக்குத்துமாமே…

திருவிழாவில் நாடகம் நடத்த அனைவரும் ஒன்று கூடினர். அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் ஒப்பனையுடன் சிறப்பாக காட்சி அளித்தனர். சிவன் பார்வதியாக நிரூப் மற்றும் இசை, பூசாரியாக இமான், கோமாளியாக ராஜூ, முப்பெரும் தேவிகளாக தாமரை, அக்ஷரா, சுருதி, ராஜா ராணியாக சிபி மற்றும் பாவ்னி, பக்கவாத்தியம் அபிஷேக், இந்த நாடகத்தை நல்லபடியாக நடத்த தொகுப்பாளர் பிரியங்கா என்று ஒரு பெரிய டீம் களம் இறங்கியது. 

இசையின் பாடலுடன் நாடகம் தொடங்கியது. பின் சின்னபொண்ணுவின் ஆன்மீக பாடல், பின் நாடகத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கோமாளி என்று நாடகம் வடிவமைக்கப்பட்டது. இதில்  சின்னபொண்ணுவை பிரியங்கா அழைக்காமல் விட, பின் அபிஷேக் சொல்லி அழைக்க அதை தனக்கு கொடுக்கப்பட்ட நோஸ்கட்டாக எண்ணி வருத்தப்பட்டார் சின்னபொண்ணு. அதற்கு அப்போதே  ’என்னை மன்னிச்சிடு ஆத்தா’ன்னு மன்னிப்பு கேட்டார் அபிஷேக். பின் மறுபடி நாடகம் தொடர்ந்தது, அகிலாண்டேஸ்வரியாக தாமரை நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு நாடக கலைஞர் தான் என்று நிரூபித்தார்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

Leave a Comment