Author: இரா.மன்னர் மன்னன்

தமிழின் மிக மூத்த இலக்கியங்களான ‘சங்க இலக்கிய’ங்களில் பதிவு செய்யப்பட்ட காதல் குறித்த செய்திகள், தமிழ்ச் சமுதாயம் காதல் மீது கொண்டிருந்த புரிதலையும் மரியாதையையும் காட்டுகின்றன. சங்க இலக்கியம் முழுக்க காதல் பாடல்கள் செறிந்து உள்ளன. சங்க இலக்கியத்தின் ஒரு பாடலிலும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கைத் துணையை சமுதாயம் தீர்மானித்ததாக குறிப்புகள் இல்லை. சங்க காலச் சமூகம் மனிதர்களின் காதலைப் போற்றும் மகத்தான சமூகமாக இருந்துள்ளது. முன்னறிமுகம் எதுவும் இல்லாத ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்த நொடியில் காதலில் வீழந்ததை, ”அவர்களின் அன்பு மனங்கள் செம்மண்ணில் ஓடிய நீர் தானும் செந்நிறம் அடைவது போல இரண்டறக் கலந்தன” – என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்ற இந்த உவமைக்காகவே அந்தப் பாடலைப் பாடிய புலவர் ’செம்புலப் பெயல் நீரார்’ – என்றே குறிக்கவும்பட்டுள்ளார். சாதியோ, பொருளாதாரமோ, ஜாதகம் போன்ற நம்பிக்கைகளோ சங்க கால காதலுக்கு…

Read More

கணிதத்துறையில் தமிழின் பங்கு அளப்பரியது. இந்திய கணிதத்தின் பெரும் ஆய்வாளராகக் கூறப்படும் ஆரியபட்டர், கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தின் திருவெள்ளறையில் தங்கி தமிழ்க் கணிதத்தை சமஸ்கிருதத்திற்கு மொழி பெயர்த்த ஒரு மொழி பெயர்ப்பாளர் மட்டுமே என்பதை ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள் ’ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற நூலில் விரிவாகவே விளக்கி உள்ளார். இதுபோக உலகம் முழுக்க இன்று அரபு எண்கள் – என்ற பெயரில் பயன்படுத்தப்படும் எண்கள் உண்மையில் பண்டைய தமிழ் எண்களே என்பதையும், அரேபியர்கள் அரபு எண்களை ‘இந்து எண்கள் (சிந்து பாயும் நாட்டில் இருந்து வந்த எண்கள்)’ என்றே அழைததையும் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் தனது ‘வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலில் விரிவாக ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார். இதனால்தான் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’ – என வள்ளுவனும், ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ – என ஒளவையும் எண்ணுக்கு எழுத்தைவிடவும் அதிக முக்கியத்துவம்…

Read More

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வேர்ச்சொல்லை ஆய்வு செய்து அதன் பொருள்களையும், சான்றுகளையும் சிறப்பாக தமிழ் உலகுக்கு கொடுத்துள்ளார் தேவநேயப் பாவாணர் அவர்கள். மூன்று மாதமாக ஒவ்வொரு பக்கமாக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்து வந்தேன். சில நாட்களுக்கு முன்பு படித்து முடித்தேன். வேர்ச்சொல் என்றால் என்ன? ஒரு சொல் எப்படி திரிபடையும்? மற்ற மொழிகளில் எப்படி திரிபடைந்துள்ளது? வட்டார சொற்கள் என்னென்ன உள்ளது? ஒரு சொல் இலக்கியங்களில் எப்படி வழங்கப்பட்டுள்ளது? ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உள்ளது? என பல கோணங்களில் ஆய்வு செய்து பாவாணர் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். பொத்தகம் என்ற சொல் பற்றியும் விரிவாக ஆய்வு செய்து பாவாணர் அவர்கள் கூறியுள்ளார். நான் பொத்தகம் என்ற சொல்லை கூறும் பொழுதும், பயன்படுத்தும் பொழுதும் தவறு என்று கூறியவர்கள் யாராவது இருந்தால் இந்த பொத்தகத்தை படித்து விட்டு மறுப்பு தெரிவிக்கலாம். பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொண்ட பெரு…

Read More

ஊடகவியலாளர், சாகித்ய அகாதமியின் ‘பாலசாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் 26ஆண்டுகளாக புகைக்கும் பழக்கத்தோடு இருந்தவர். 2 ஆண்டுகள் முன்பு புகைப்பழக்கத்தை கைவிட தான் மேற்கொண்ட முயற்சி குறித்தும், அதில் பெற்ற வெற்றி குறித்தும் யெஸ்.பாலபாரதி முகநூலில் விளக்கி உள்ளார். மிகவும் பயனுள்ள அந்த பதிவு அப்படியே நம் வாசகர்களுக்காக… ”இன்றோடு நான் சிகரெட் புகைப்பகை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. புகையில்லா மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மஞ்சள் காமாலை, அம்மை, அல்சர் என எத்தனையோ முறை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த பொழுதுகளிலும் கூட சிகரெட் இல்லாமல் இருந்ததில்லை. 90களின் இறுதியில் சிகரெட் வாங்க காசில்லாமல் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன். காலைக் கடன் கழிக்க, டீ குடித்தவுடன், உணவு செரிக்க, டென்ஷன் குறைக்க, புதிய யோசனைகளுக்கு என்று எப்போதும் புகைப்பதைத் தொடர, ஏதேனும் ஒரு காரணம் என்னிடம் இருக்கும். தொண்டை காய்ந்து போனால் சிகரெட் பிடிப்பதில் சுகம்…

Read More

ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. பார்க்ளேஸ் வங்கியில் வேலை, ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator) அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும்…

Read More

இந்த ஆண்டு அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. யார் இந்த அம்பை? – ஒரு எளிய அறிமுகம். 1960ஆம் ஆண்டில் தனது 16ஆவது வயதில் கண்ணன் இதழில் எழுதத் தொடங்கியவர் எழுத்தாளர் அம்பை. 1962ல் அம்பை எழுதிய‌ ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற துப்பறியும் நாவல் இளம் வயதிலேயே நாவல்களுக்கான போட்டியில் முதல் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. பெரும் இலக்கிய ஆளுமைகளின் சிறுகதைகளோடு இவர் இளம் வயதில் எழுதிய கதைகளும் விகடனில் வெளிவந்தன. உடல் கடந்த காதல் குறித்து இவர் எழுதிய ‘அந்திமாலை’ என்ற நாவலுக்கு கலைமகள் நடத்திய போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது. இவை இவரது எழுத்துத் திறனுக்கு சான்றாக இருந்தன. ஆனால் அம்பை தொடங்கிய இடமும் பின்னர் அவர் பயணித்த தடமும் வேறானவை. த‌னது அந்திமாலை நாவல் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றபோதும், அதுகுறித்து…

Read More

மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தைச் சார்ந்த எழில் முருகன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் முனைவர் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா மற்றும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜன் ஆகியோரால் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது கல்வெட்டுடன் கூடிய இரண்டு சிற்பங்கள் கிடைத்தன அவை பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இரும்பேடு மேட்டுத்தெருவின் தெற்கேயுள்ள நீரோடையின் கரையோரம் காணப்பட்ட முதல் சிற்பமானது ’விநாயகி’ என அதன் சிற்ப அமைப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டது. இரண்டாவது சிற்பமானது உள்ளூர் மக்களால் துர்க்கை அம்மன் என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சிற்ப அமைதி ஆண் சிற்பக்கூறுகளை கொண்டிருந்தது. மேலும் ஓராண்டு பிறகு அதே இடத்தில் ஆய்வாளர்களால் மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது விநாயகர் சிலை அருகே மேலும் ஓர் கல்வெட்டுடன் கூடிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முந்தைய இருசிற்பங்களின் சமகாலத்தைச் சார்ந்ததாக புதிய…

Read More

இதுவரை தொழிற் கை அமைக்கும் 24 முத்திரைகளைப் பார்த்தோம்.. நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை தொழிற்கை முத்திரைகளைப் பார்த்தோம்… அடுத்தது 4 வகையான எழிற்கை முத்திரைகள் குறித்து பார்க்க உள்ளோம். அவை, 1. கஜ ஹஸ்தம் 2.தண்ட ஹஸ்தம். 3.டோல ஹஸ்தம். 4. பிரசாரித ஹஸ்தம். இம்முத்திரைகள் எழிற் கை முத்திரை என்று அழைக்கப்படும். இவை ஒரு அழகு மற்றும் சிற்ப அமைதிக்காக படிமங்களில் அமையும். ஒவ்வொரு எழிற்கை முத்திரையையும் விரிவாகப் பார்ப்போம். 1. கஜ ஹஸ்தம்: கையை நேராக நீட்டி, மணிக்கட்டில் கைத்தலத்தைக் கீழ்நோக்கிச் சரித்து, தளிர்க்கை போல் விரல்களை அமைத்து, கம்பீரமாகப் பிடிக்கும் கையானது கஜ ஹஸ்தம் (தும்பிக்கை முத்திரை) எனப்படும். இதனை ‘கரி ஹஸ்தம்’ என்றும் சொல்வதுண்டு. கஜ ஹஸ்தத்தை ஆடவல்லான் படிமத்தில் காணலாம். 2. தண்ட ஹஸ்தம்: கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு அமைப்பது தண்ட ஹஸ்தம் எனப்படும். இக்கையானது அமர்ந்த…

Read More

தமிழக நாணயங்களின் வரலாற்றில் இராஜராஜன் பெற்ற இடம் மிக முக்கியமானது ஆகும். தமிழகத்தில் கிடைக்கும் பழைய நாணயங்களில் சுமார் 70% காசுகள் இராஜராஜனின் வெளியிட்ட காசுகளாக உள்ளன. அந்த அளவிற்கு இராஜராஜன் அதிக காசுகளை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் பொறித்த காசுகள் சோழர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை புழங்கி இருக்க வேண்டும். இராஜராஜனின் நாடுகள் பிற நாடுகளிலும் புழங்கியதால், தமிழ் மொழியின் இன்னொரு எழுத்து வடிவமான நாகரியை இராஜராஜன் பயன்படுத்தினார். இதனால் இராஜராஜனின் காசுகளை பிற மொழிக்காசுகள் என்று பலர் தவறாக எண்ணுகின்றனர். கி.பி.12ஆம் நூற்றாண்டில்தான் இந்தி மொழி நாகரியை பயன்படுட்தியது, ஆனால் அதற்கு முன்பே தமிழகம் நாகரியை பயன்படுத்தி உள்ளது. அதனால் நாகரி வட இந்தியர்களை விட நமக்கே உரிமை உள்ள எழுத்து வடிவம். சோழர் வரலாற்றில் சங்ககாலம் முதல் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டது இல்லை. சோழர்களில் முதன்முதலில் தங்க நாணயம் வெளியிட்ட அரசர் இராஜராஜ சோழனே ஆவார்.…

Read More

புத்தரை பல கோணங்களில் ஆய்வு செய்து சிறப்பாக எழுதப்பட்ட பொத்தகம் இது. பவுத்த சமயம் தோன்றுவதற்கு முன் அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது? அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது? மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்றவாறு இந்த பொத்தகம் தொடங்குகிறது. அடுத்ததாக புத்தர் பார்வையில் நீதிமுறை, ஜனநாயகம், நிர்வாகம் ,சொத்து, உரிமைகள் , வர்க்கம், சாதி, பெண்கள் அனைத்தும் எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் காஞ்ச அய்லய்யா சிறப்பாக ஆய்வு செய்து பலவற்றுடன் ஒப்பிட்டு சிறந்த தகவல்களை கூறியுள்ளார். நிறைய இடங்களில் புத்தரின் கொள்கைகளில் உள்ள முரண்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். சங்கத்தின் நடைமுறை விஷயங்களில் புத்தரும் சங்க உறுப்பினர்களும் அதிக அளவிற்கு ஆணாதிக்கக் கொள்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டனர் என்பது மிகவும் தெளிவு. எடுத்துக்காட்டிற்கு, பெண்கள் மீது அவர் விதித்த நிபந்தனையைக் கூறலாம். பிக்குணி நூறு ஆண்டுகள் அமைப்பில் இருந்தவராக இருந்தாலும், பிக்குவிற்கு அவர் மரியாதை செலுத்தவேண்டும்; பிக்கு வரும்போது எழுந்து நிற்க வேண்டும்.…

Read More