- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ளதால் திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்: செப்டம்பர், அக்டோரில் கொரோனா 3ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும், தொற்று தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகள், சமூகம், மதக் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்க அனுமதி . மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தலைவர்களை சார்ந்த குடும்பத்தினர், பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தலா 5 பேர் உரிய…
ஐபிஎல் திருவிழா முடிந்த இரண்டு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு தரமான சம்பவங்கள் நடந்துள்ளது, ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வின் வருகை மற்றொன்று ரொம்பவே எல்லாரும் விரும்பிய தருணம் . ஆம் இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன் என பிசிசிஐ தரப்பிடம் ஒரு தனியார் ஊடகம் கேட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த பிசிசிஐ இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட…
தமிழக சட்டப் பேரவையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்காக தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி, 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது குற்றம் ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.…
ரூ.15 கோடி மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையையும், உலகத்துக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறை சாற்றும் அறிவிப்பு ஒன்றை விதி எண் 110 இன் கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்ப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. மகாசக்ரவர்த்திகள் எல்லாம் இந்தியாவைத் தன் குடையின்…
செங்கல் சூளை வைத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, மண் எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி, தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு , எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் மண் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கென தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதன்படி ஒன்றரை அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை சுரண்டுவதற்கு இணையாகாது என்பதால், ஒன்றரை அடி வரை மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணத்தை மணல் எடுப்போர் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாக உரையைத் தொடங்கினார். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பொறுப்பேற்கும் போதெல்லாம் தமிழ் அரசினை நடத்தியது திமுக தான் என்று பெருமிதம் தெரிவித்தார். பண்டைய நாகரீகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளதாகக் கூறிய ஸ்டாலின்,சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நெல்லையில் 15 கோடி செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
காபூலில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின. இதில் பெண்களுக்கு இடமளிக்க தலிபான்கள் மறுத்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கும் பங்களிக்க கோரி பெண்கள் காபூல் வீதிகளின் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள் அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடூர தாக்குதளுக்கு உள்ளான 2 பத்திரிகையாளர்களும் ரத்த காயங்களுடன் தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்க பத்திரிகையாளர் மார்கஸ் யாம் என்பவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
2000 கி.மீட்டர்களுக்கு அப்பால் நீயே உன் நேரத்தையும், பாதையையும் முடிவு செய்யும் பரிபூரண சுதந்திரத்தை பெற்றிருக்கிறாய்.
ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே பிரதமர், துணை பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை என்றும், கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாங்களும் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம். அதேசமயம் ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும்…
மூளையில் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தான் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக விஜே அர்ச்சனா வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான அர்ச்சனா விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அனைவரது கவனம் ஈர்த்தார். இதனிடையே கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. பிறகு இதுதொடர்பாக பேசிய அர்ச்சனா தனக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் நீண்ட நேரம் நிற்க முடியாது எனவும் தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15 முதல்16 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இப்போதைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது எனவும்…
