Author: Admin

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்கு நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் உடன் கொச்சி சென்ற போது நயன்தாராவின் அம்மாவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Read More

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், டோக்கியோ மாகாணத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

பெண் ஒருவருக்கு பானிபூரி என்றால் மிகவும் பிடித்தமான உணவாம். அதனால், அந்த பெண்ணின் திருமணத்தில், அப்பெண்ணுக்கு பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர். https://www.instagram.com/reel/CQGWMz1pGVR/?utm_source=ig_web_copy_link இந்த வீடியோவை மணமகள் ஒப்பனை கலைஞரான அக்ஷயா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Read More

பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஒ.பன்னிர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முரணாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும்,பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால்,பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை, ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை வாடிக்கையாகக்…

Read More

கேரளாவில்ஜிகா வைரஸ் பாதிப்பு 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில் மேலும்13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது என அம் மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது, ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது, டீசல் விலை ரூ.100 யை நெருக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர். விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘ஒரு வழியாக 100 ரூபாயை எட்டி விட்டது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டு தான் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சைக்கிளுக்கு மாற வேண்டுமென மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்த அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read More

தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால், தமிழக மாநில பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்கிறார்.

Read More

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். அதிகாலை 3 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்த ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைவா.. தெய்வமே என ரசிகர்கள் கோஷமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலங்கானா அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனாவால் இந்திய அரசின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகள் அதனை மீட்க புதுவிதமான முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா அரசு கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. மக்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் உரிமம் பெற்ற மதுக்கடையில் வாரம் ஒரு நாள் இலவசமாக மது வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதன்பின் குறிப்பிட்ட அளவுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read More