- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
உத்தரபிரதேசத்தில் தொலைக்காட்சி நிரூபரை ஐஏஎஸ் அதிகாரி ஓட ஓட விரட்டி சென்று அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்திற் உட்பட்ட மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், உன்னாவ் பகுதியில், உள்ளூர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது, அதற்கு ஐஏஎஸ் அதிகாரி திவ்யான்ஷு பட்டேல் துணை போனதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை செய்தியாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் நிரூபரின் இந்த செயலை கண்டு கடுப்பான மாவட்ட ஆட்சியர் பட்டேல், அவரை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியின் 27வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆனால் அதன்பின் கோல் அடிக்க இரு அணிகளும் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் சொந்த நாட்டில் நடந்த இறுதி போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகமடைந்துள்ளானர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி – செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். இந்தப் போட்டியில் ஆஷ்லே பார்டி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதேசமயம் அவர் வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் ஆஷ்லே பார்டி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்ததாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக அமைச்சர் சிடி ரவி, “கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தன்னுடைய கட்சி நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்துள்ளார்? வன்முறை செயல்களில் ஈடுபட சிவக்குமாருக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்துவிட்டாரா என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் டி.கே.சிவக்குமாரின் செயல்பாட்டை கண்டித்து வரும் சூழலில் அடி வாங்கிய நபர் சரியாக கொரோனா…
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னையில் நடந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி காலில் செருப்பு அணிந்து பங்கேற்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறுகையில், தேர்தலுக்கு முன் ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ எனப் பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து இந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார் என்றும் ,கருணாநிதி சமாதிக்கு செருப்பு அணியாமல் செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், இந்து கடவுள்களை செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு…
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என உத்தரப் பிரதேசத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு உருவாக்கியுள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதன்படிஉத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது. 2 குழந்தைகள் மட்டும் பெற்றவர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும். 2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். இதனைத் தவிர குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் சேர்க்கப்படும். அனைத்து…
பிரதமர் மோடி தலைமையிலான .அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 42 சதவீத பேர் (33 பேர்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ள அறிக்கையின்படிபிரதமர் அமைச்சரைவையில் 24 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. 5 பேர் மீது வகுப்புவாத ஒற்றுமையைக் குலைத்த வழக்குகளும், 7 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்குகளும் உள்ளன. அத்துடன், அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ஒரு அமைச்சருக்கு 16.24 கோடி சொத்து உள்ளது. நான்கு பேருக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. மேலும் 12 மத்திய அமைச்சர்கள் 8 வகுப்பு முதல் 12 வகுப்புவரை படித்துள்ளனர். 64 அமைச்சர்கள் பட்டப்படிப்போ அல்லது அதற்கு மேலோ படித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.
ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவபரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில். அங்கு பரிசோதனை முடித்து விட்டு கடந்த 09 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பினார். தற்போது ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் ரஜினி தரப்பினர் கூறியுள்ளனர். இந்த நிலையில், வரும் ஜூலை 12 ஆம் தேதி தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சென்னையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர் மன்றத்தினர் பலரும்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதன் பணிகள் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில்தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முன்னதாக, படத்தின் பெயரை டீஸரை க அறிவித்த படக்குழு. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுள்ளது. சமூக வலைதளத்தில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில்விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல்: வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம் என தெரிவித்துள்ளார். இயக்குநர் லோகஷ்கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில்…
கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலக்கியங்களில் இருந்து ஆதாரங்களை மேற்கோள்காட்டி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல். முருகன் பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் கொங்குநாடு என ஒரு மாவட்டம் இல்லை ஆகவே கொங்குநாடு என மத்திய அரசு ஏன் குறிப்பிட்டது என கேள்வி எழுந்த நிலையில் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்கப்படலாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று வெளியான நாளிதழ் செய்தியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். அத்துடன் கொங்குநாடு தொடர்பான பல்வேறு இலக்கிய ஆதாரங்களையும் வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வானதி சீனிவாசன், கொங்கு தனி…
