- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கொங்குநாடு குறித்த பாஜகவின் பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தையும் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொங்குநாடு குறித்த கேள்வியினை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூறிய அவர்,அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறினார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்றும் இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என கூறியுள்ளார்.
தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் கமல் ஹாசன் காணொளி காட்சி மூலம் உரையாடினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை காணொளி காட்சி மூலம் தொடர்புகொண்டு, அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் தலைவர் கமல் ஹாசன் நேற்று கலந்துரையாடினார். “வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ என்று பாராட்டிய கமல்ஹாசன் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் நீங்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.” என்றார் மேலும் போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள்…
நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய் அவர்கள், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல. தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரிஏய்ப்பு செய்ததாக எவ்வித ஆவணங்களும்…
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஆமீர்கான் தன் மனைவி கிரண் ராவுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீர்கான் தனது சொந்த தயாரிப்பில் ”லால் சிங் சத்தா” என்ற இந்தி படத்தை உருவாக்கி வருகிறார். இதன் படப்படிப்பு லடாக்கின் வாகா கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கானை பார்த்த லடாக் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து லடாக் மக்களின் கோரிக்கையை ஏற்று படப்படிப்பு தளத்தில் ஆமீர் தன் மனைவியுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாடுகளுக்கு அமெரிக்கா கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வரும் நிலையில் இந்தியாவிற்கு வழங்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளுக்கு 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த வகையில் நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கு மட்டும் வழங்கவில்லைஇதுகுறித்து விளக்கமளித்து அமெரிக்கா : ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிடமிருந்து தடுப்பூசி பெறும் முன்னதாக உள்நாட்டு சட்ட நடைமுறை, ஒழுங்குமுறைகளை செய்து முடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த விதிமுறைகளை செய்து முடிக்க நேரம் எடுப்பதாகவும் இந்தியாவிற்கு தடுப்பூசிகள் இன்னமும் அனுப்பப்படவில்லை. விரைவில் இந்த நடைமுறைகளையா முடித்தது இந்தியாவிற்கு தடுப்பூசிகள் அனுப்பப்படும்’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்றது. அங்கு நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விளையாடியது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கேயே தங்கியுள்ளது.இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து தொற்று உறுதியான வீரர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதலை நிர்வாகம் மேற்க்கொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் யாருக்கும் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு அறிவித்த அதே தினத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற வீரர்களின் உடமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் ஜெர்சியைப் பாதுகாப்பது என்பது அவர்களது பாரம்பரியத்தைக் காப்பதோடு அவர்களுக்கான மரியாதையையும் அளிப்பதற்கு சமம் என்றும் முன்னாள் வீரர் சாபா கரீம் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 10 ஆம் எண் ஜெர்சியை ஒருமுறை ஷர்துல் தாக்கூர் அணிந்தது பெரிய சர்ச்சையானதால் பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரின் 10எண் ஜெர்சியை ரிட்டையர்டு செய்தது. அதே போல் தோனியின் 7 ஆம் எண் ஜெர்சியையும் ரிட்டையர்டு செய்ய வேண்டும் என சாபா கரீம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது, இது என் இதயத்தையே பாதிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேற உள்ளதால் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது அமெரிக்காவின் இந்த முடிவை உலக நாடுகள் பல விமர்சித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்கள் கொன்று குவிக்கிறார்கள். அங்கு பெண்களும், குழந்தைகளும் பல கொடுமைகளை, கஷ்டங்களை, அனுபவித்து வருகிறார்கள். அனுபவிக்க போகிறார்கள். இது என் இதயத்தை நொறுக்குகிறது, என்று புஷ் ஜெர்மன் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிா்த்துப் போராடிய போராளி முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா. இன்று தனது 100 ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறாா். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சங்கரய்யா குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசியல் தலைவர்களில் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த தோழர் சங்கரய்யா பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக அடையாளமாக விளங்குபவர். சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி – தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும்…
வறுமையின் நிறம் சிவப்பு என இருக்கும் நிலையில் வறுமையின் நிறம் சிவப்பு அல்ல என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பழம்பெரும் கட்சியின் சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் என்.சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில் கமல்ஹாசன் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது: வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார். Ativador Office 2010 Baixar Driver Easy Crackeado
